பிரான்ஸில் பாடசாலை அருகே கோடரியுடன் சென்றவர் சுட்டுக்கொலை

பிரான்ஸில் துலோன் அருகிலுள்ள La Seyne-sur-Mer பகுதியில், ஒரு பாடசாலை அருகே குழந்தைகளை தொந்தரவு செய்த 30 வயதுக்குமேல் ஒருவனை காவல் துறையினர் விரட்டியுள்ளனர்.

எனினும்  அந்த நபர் ஒரு தோட்டத்திற்குள் ஓடி, கோடரியுடன் காவல் துறையினரை தாக்க முயன்றார்.

இதையடுத்து காவல் துறையினர் முதலில் தடுப்புப் பிஸ்டல் (taser) பயன்படுத்தினர், பின்னர் அவரது கால்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் காயங்களால் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version