கனடிய பொலிஸாரின் சீருடையில் ஏற்படும் மாற்றம்

கனடாவின் பிரதான பொலிஸ் பிரிவான கனடா ராயல் மவுண்டெட் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கனடிய அதிகாரிகளின் சீருடையில் அடர் நீல நிற சட்டைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரின்ஸ் எட்வர்ட் தீவில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் இந்த மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பின்னர் எதிர்வரும் 18 மாதங்களில் நாடு முழுவதும் படிப்படியாக இந்த சீருடை அறிமுகம் செய்யப்பட உள்ளது. “30 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த சீருடை மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் இந்த சீருடை மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முந்தைய சாம்பல் நிற சட்டைகளுக்குப் பதிலாக, புதிய சட்டைகள் மேம்பட்ட, நவீன பொருட்களால் தயாரிக்கப்பட்டவை என்பதால் அதிக வசதியையும், பல்வேறு சூழல்களில் தழுவி அணியக்கூடிய தன்மையையும் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கான சிறப்பு வடிவமைப்பும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சீருடை மாற்றத்தின் போது மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதிய மற்றும் பழைய சீருடைகளுடன் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் போலி சீருடையில் எவரேனும் மோசடிகளில் ஈடுபடுவதாக சந்தேகம் எழுந்தால் அவ்வாறானவர்களிடம் அடையாள அட்டையை மக்கள் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Exit mobile version