பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் 50 – 55 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.