கனடாவில் ஹைஹூண்டாய் ரக வாகனங்கள் சிலவற்றை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹைஹூண்டாய் நிறுவனம் கனடாவில் சுமார் 44,000க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இருக்க பட்டிகள் உரிய முறையில் செயற்படாத காரணத்தினால் இந்த நவடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டால், இருக்கைப்பட்டி சரியாக பொருந்தாமல் பிரிந்து செல்லக்கூடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரும்பப் பெறல் நடவடிக்கை ஹைஹூண்டாய் பலிசேட் (Hyundai Palisade) மாடல்களுக்கு உட்பட்டது. 2020 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட மாடல்கள் அனைத்தும் இதில் அடங்குகின்றன.
மொத்தம் 43,990 ஹைஹூண்டாய் ரக எஸ்.யு.வீ கனடாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடிய போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
சில வாகனங்களில் ஓட்டுனர், முன் பயணி மற்றும் பின்புற 2வது வரிசை இருக்கைகளில் உள்ள இருக்கைப் பட்டிகள் உரிய முறையில் பொருத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
திருத்தப்பணிகள் முடியும் வரை, ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் சீட்பெல்ட்டை வலுவாக பூட்டிச் செருகி, இழுத்துப் பார்த்து சரிபார்க்க வேண்டும் என்று ஹைஹூண்டாய் பரிந்துரைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஹைஹூண்டாய் வாகன உரிமையாளர்கள் தபால் மூலம் அறிவிக்கப்படுவார்கள்.