சீனாவின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் 336 கோடி ரூபா வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.