ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
இதன்போது இரு நாடுகளின் பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.