தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் தனுஷ்.
நடிப்பை தாண்டி படங்கள் இயக்குவது, தயாரிப்பது, பாடல்கள் எழுதுவது, பாடுவது என பன்முகம் காட்டி வருகிறார். இன்று தனுஷ் நடித்து, இயக்கியுள்ள இட்லி கடை திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் தனுஷுடன் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று படம் வெளியாகியுள்ளது .