கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தமைக்கு சீனா கவலை வெளியிட்டது.

தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில்  விஜயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் குழப்பங்களில் சிக்கி  41 பேர் உயிரிழந்தமைக்கு சீனா கவலை தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சீன அரசின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜியு கியாகுன் செய்தியாளர் மாநாட்டில் கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

மக்கள் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பாதுகாப்பை உறுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சீன அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். அதேநேரம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும், சீன அரசின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜியு கியாகுன் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள சீன தூதரகத்திடம் அனுதாபத்தை சீன அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version