விசா கட்டணத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு

எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எச்-1பி விசா மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த விசாவை பயன்படுத்தி 3 ஆண்டுகளுக்கு அங்கு தங்கி புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியலாம். 

தேவைப்பட்டால் அதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும். 

அதன்படி தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 65 ஆயிரம் விசாக்களை அரசாங்கம் வழங்கி வந்தது. 

அதேபோல் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த 20 ஆயிரம் பேருக்கும் எச்-1பி விசா வழங்கப்பட்டது. 

எனவே சுமார் 13 லட்சம் வெளிநாட்டினர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எச்-1பி விசா கட்டணத்தை 1 இலட்சம் அமெரிக்க டொலராக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உயர்த்தினார். 

அவரது இந்த அறிவிப்பு அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

எனவே ட்ரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Exit mobile version