கனடாவில் தகாத செயலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாதண்தில் தகாத செயலில் ஈடுபட்ட நபர் ஓருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கொஸ்டான்டினோஸ் பணகியோட்டிஸ் செக்கூரஸ் (Kostantinos Panagiotis Tsekouras) என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் சிறார்களை இலக்காகக் கொண்ட பாலியல் குற்றங்களில் முன்பு தண்டிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகள் வைத்திருந்தார் எனவும் பதிவுகளைத் தயாரித்தார் எனவும் இந்த நபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டள்ளன.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செக்கூரஸ் இதே ஆண்டின் ஆரம்பத்தில் சிறுவர் ஆபாசக் காட்சிகளை வைத்திருத்தல், அவற்றை உருவாக்குதல், மற்றும் சிறுவர்களுக்கு பாலியல் வகை உள்ளடக்கம் காண்பித்தல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டிருந்தார். 

Exit mobile version