திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கிய சுமார் 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,000 பேர் மலையிலிருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய ஏனையோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.