அமெரிக்காவில் இந்திய மருத்துவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை

அமெரிக்​கா​வில் ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த இளம் பல் மருத்​து​வர், மர்ம நபரால் சுட்டு கொல்​லப்​பட்​ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் சனிக்கிழமை (4) ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர் பிடிஎஸ் பட்​டப்​படிப்பை முடித்து விட்​டு, கடந்த 2023-ம் ஆண்டு மேற்​படிப்​புக்​காக அமெ ரிக்​கா​வின் டெக்​ஸாஸ் மாகாணத்​தில் உள்ள டல்​லஸ் நகரில் குடியேறி​னார்.

கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு மேற்​படிப்பு முடித்த சந்​திரசேகர், அங்கு ஒரு நிரந்தர வேலையை தேடிக்​கொண்​டே, ஒரு காஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை​யில் அடை​யாளம் தெரி​யாத நபர் சந்​திரசேகரை துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​று​விட்டு தலைமறை​வாகி விட்​டார். தகவல் அறிந்த போலே சந்திரசேகரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்​துள்​ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.    

Exit mobile version