காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்க அமைதித் திட்டம் குறித்த இறுதி உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட ரகசிய பேச்சுவார்த்தைகள் இன்று (7) எகிப்திய நகரமான ஷார்ம் எல்-ஷேக்கில் ஆரம்பமாகியுள்ளது.
பாலஸ்தீன மற்றும் எகிப்திய அதிகாரிகள் இந்த அமர்வுகளின் போக்கு தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளனர்.
இதன் மூலம் பல பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்க ப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவாக அமைதித் திட்டத்திற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் பணயக் கைதிகளின் விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார்.
வரவிருக்கும் நாட்களில்” பணயக்கைதிகளை விடுவிப்பதை அறிவிப்பேன் என்று இஸ்ரேலின் பிரதமர் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதனடிப்படையில் காசா அமைதி திட்டம் தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
20 நிபந்தனைகளுடன் இஸ்ரேல் – பாலஸ்த்தீன போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இந்த அமைதி திட்டத்திற்கு இருதரப்பினரும் தங்களது இணக்கப்பாட்டை வௌிப்படுத்தியுள்ள நிலையில், அதனை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசா அமைதி திட்ட ரகசிய பேச்சு ஆரம்பம்
