பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி யதில் இருந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் ஹவுஸ் மேட்டிற்கும், ப்ரீமியம் ஹவுஸ் மேட்ஸ் இடையே கடும் மோதல் வலுத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9-ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதில் வாட்டர்மெலன் ஸ்டார், பார்வதி, அரோரா சின்க்ளேர் உள்பட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
ஆரம்பம் முதலே வாட்டர்மெலன் ஸ்டாருடன் பலருக்கும் மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் பார்வதிதான் அவருக்கு ஆதரவாக பேசி வந்தார். அதை தொடர்ந்து கலையரசனும் அவர்கள் டீமில் சேர்ந்து விட தற்போது அவர்கள் தனி அணியாக தெரியத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 3வது நாளான இன்று வாட்டர்மெலன் ஸ்டார் ப்ரீமியம் ஹவுஸில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, அரோராவிடம் அவர் ப்ளையிங் கிஸ் கேட்டு பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
இதை பலரும் பகிர்ந்து வாட்டர்மெலன் ஸ்டாரை கலாய்த்து வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பார்வதி, வியான்னா இடையே மோதல் வெடித்துள்ளது.