தேசிய அபிவிருத்தி மீதான ஓயாத அர்ப்பணிப்பில் 28 ஆண்டுகளை SDB வங்கி கொண்டாடுகிறது

இலங்கை மக்களுக்கும், அதன் பொருளாதாரத்திற்கும் சுமார் மூன்று தசாப்த காலம் அர்ப்பணிப்புமிக்க சேவையைக் குறிக்கும் வகையில், SDB வங்கி தனது 28 வது ஆண்டு நிறைவை எளிமையான, ஆனால் அர்த்தமுள்ள வழியில் தனது தலைமை அலுவலகத்தில் பெருமையுடன் கொண்டாடியுள்ளது. அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரதும் நம்பிக்கையின் வலுவான அத்திவாரத்துடன், தேசிய அபிவிருத்தி மீது வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பை இவ்வைபவம் பிரதிபலித்துள்ளது. 

பன்மைத்துவம் மற்றும் அனைவருக்கும் வாய்ப்பு ஆகியவற்றிற்கு வங்கி கௌரவம் அளிப்பதை அடையாளப்படுத்தும் வகையில், இவ்வைபவமானது சர்வமத அனுட்டானங்களுடன் ஆரம்பமானதுடன், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், தலைமைத்துவ அணி, மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் இதில் பங்குபற்றினர். இவ்வைபவத்தின் சிறப்பம்சமாக, நீண்ட கால சேவையை ஆற்றியுள்ள பணியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ள ஊழியர்களுக்கு விசேட கௌரவம் அளிக்கப்பட்டது. சமூகங்களுக்கு வலுவூட்டி, தொழில்முயற்சியாண்மையை வளர்த்து, மற்றும் தேசிய வளர்ச்சியை முன்னேற்றுவதில் SDB வங்கியின் குறிக்கோளின் மையமாக அவர்களுடைய அர்ப்பணிப்பு அமைந்துள்ளது. 

SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதம நிர்வாக அதிகாரி கபில ஆரியரத்ன அவர்கள், சிறப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதை முன்னெடுப்பதற்கு இலங்கை மக்களுக்கு துணையாக நின்று, சமூகங்களை மேம்படுத்துவதற்கு வழிகாட்டியாகத் திகழ்வதில் SDB வங்கி 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். “தேசிய அபிவிருத்தி, சமூகங்களுக்கு வலுவூட்டுதல், மற்றும் முற்போக்கான தொழில்முயற்சியாண்மை உணர்வை வளர்த்தல் ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பில் எமது பயணம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இச்சாதனை இலக்கானது வெறுமனே எமது பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பது மாத்திரமன்றி, நோக்கத்துடனான புத்தாக்கம், நேர்மையுடனான சேவை, மற்றும் கனவு காணத் துணியும் ஒவ்வொரு இலங்கையரையும் மேம்படுத்தல் ஆகியவற்றுக்கான புதுப்பிக்கப்பட்ட அழைப்பினை விடுக்கின்றது. எதிர்காலத்தை உற்றுநோக்கும் போது, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வளர்ச்சியை முன்னெடுத்து, நெகிழ்திறன், சுபீட்சம்மிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் தொடர்ந்தும் உறுதியாக உள்ளோம்.” 

இந்த ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு அப்பால், நிலைபேற்றியல், சமூக ஈடுபாடு, மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கும் வளர்ச்சி ஆகியவற்றின் மீது தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், கடற்கரை சிரமதானப் பணி மற்றும் நாடெங்கிலும் கிளை மட்டங்களிலான கொண்டாட்டங்களையும் SDB வங்கி திட்டமிட்டுள்ளது. 

அதனுடன் தொடர்புபட்ட தரப்பினரின் நம்பிக்கை மற்றும் SDB வங்கி குடும்பத்தின் கூட்டு முயற்சிய ஆகியவற்றுக்கு இச்சாதனை இலக்கு சான்று பகருவதுடன், எதிர்வரும் காலங்களிலும் மகத்துவத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இந்நிறுவனத்திற்கு உத்வேகமளிக்கின்றது. 

SDB வங்கி குறித்த விபரங்கள்: 

ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட, வாடிக்கையாளரை மையப்படுத்திய மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ள வங்கியான SDB வங்கி, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தலுடன், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகத் திகழ்வதுடன், BB +(lka) என்ற Fitch Rating கடன் தர மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. 

நாடளாவியரீதியிலுள்ள 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, நாடெங்கிலுமுள்ள தனது தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வர்த்தக வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை இவ்வங்கி வழங்கி வருகின்றது. சூழல், சமூகம், மற்றும் நிர்வாக ஆட்சி (Environmental, Social, and Governance – ESG) கோட்பாடுகள் SDB வங்கியின் பண்பாடுகளில் ஆழமாக உட்பொதிந்துள்ளதுடன், நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் மூலமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வர்த்தகங்களை மேம்படுத்துவதில் மிகவுறுதியான கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையை புதிய உச்சங்களுக்கு இட்டுச்செல்லும் நோக்குடன், குறிப்பாக பெண்களுக்கு வலுவூட்டல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் நிலைபேணத்தக்க அபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து வாய்ப்பளித்தல் ஆகியவற்றில் இவ்வங்கி அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.

Exit mobile version