நாளைய பொறியியலாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடும் SLT-MOBITEL அனுசரணை உடனான EngEx 2025

பொறியியல் விசேடத்துவத்தைக் கொண்டாடும் EngEx 2025 கண்காட்சி SLT-MOBITEL அனுசரணை உடன் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது. இலங்கையில் நடைபெறும் மிகப்பெரிய பொறியியல் கண்காட்சியான EngEx 2025, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதோடு இம்முறை அதன் வைர விழா நிகழ்வாகும். 

இம்முறை தொழிற்துறைத் தலைவர்கள் புத்தாக்குனர்கள் பொறியியல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 52,000 இற்கு அதிகமானோர் EngEx 2025 கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர். 

தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, எம் தேசத்தின் முன்னேற்றத்தில் பொறியியல் கண்டுபிடிப்புகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. கண்காட்சியின் தலைப்பு அனுசரணையாளராக இணைந்து செயற்பட்டமை ஊடாக இலங்கையின் எதிர்கால பொறியியலாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை வளர்த்தெடுப்பதில் தான் கொண்டுள்ள தனது உறுதிப்பாட்டை SLT-MOBITEL மேலும் ஸ்திரப்படுத்தியது.

Exit mobile version