2025 லங்கா பிரீமியர் லீக் (LPL)தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்தப்படாது என்று ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (22) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில்,
அடுத்த ஆண்டு பெப்ரவரி – மார்ச் 2026 இல் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ICC ஆடவர் உலகக் கிண்ணம் இருபதுக்கு 20 தொடருக்கான முன்கூட்டிய தயார்ப் படுத்தலுக்கான தேவையை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உலகக் கிண்ணத்திற்கு முன்னர் விரிவான மைதானத் தயார் நிலையை உறுதி செய்வதில் முழு கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் இந்த ஆண்டு குறித்த தொடரை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
