டிரம்ப் பிறப்பித்த உத்தரவு!

டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 6 வரை அமெரிக்க ஜனாதிபதி கால அவகாசம் வழங்கிய நிலையில், நாளை 06 ஆம் திகதி முதல் டிக் டாக் செயலி செயல்படாது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், டிக் டாக் செயலிக்கு மேலும் 75 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, அதற்கான உத்தரவும் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 17 கோடிக்கு அதிகமான பயனர்கள் TikTok செயலியில் உள்ளனர். கடந்த ஜோ பைடனின் அரசில் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் அந்த செயலியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் ஒரு காலக்கெடு விதித்தார்.

இந்த நிலையில், நாளையுடன் அந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், டிக் டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம்  மேலும் 75 நாட்களுக்கு நீட்டித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version