ஜனாதிபதி மல்வத்து பீடத்திற்கு விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (06) காலை மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். 

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரருக்கு இதன்போது தெளிவுபடுத்தியதோடு, அவருடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

Exit mobile version