மீன் லொறியில் சிக்கிய 05 கோடி ரூபாய் கஞ்சா

05 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் நீர்கொழும்பின் பிடிபன லெல்லம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

மீன்களை கொண்டு செல்வதாக கூறி சந்தேக நபர்கள் இந்த கஞ்சாவை கொண்டு சென்றுள்ள நிலையில், லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கிராம் கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

கஞ்சா கையிருப்பின் பெறுமதி ஐந்தரை கோடிக்கும் அதிகம் என பொலிஸார் கூறுகின்றனர். 

சம்பவம் தொடர்பில் துங்கல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version