ஐ.எம்.எப் பணிப்பாளர் இன்று நாட்டுக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று (16) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தரும் அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார். 

இந்த விஜயத்தின் போது, கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய தரப்பினரை சந்திக்கவுள்ளதுடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரடியாக அவதானிக்கவுள்ளார். 

அத்துடன், நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் பணிகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய வழிகள் மற்றும் நாட்டின் பிரஜைகளுக்கு மிகவும் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Exit mobile version