ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவில் சரிசெய்து, பொதுச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version