ரைஸ் மற்றும் கொத்து விலைகள் உயர்வு

இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் அந்தச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

உணவகங்கள் நடத்தப்படும் அனைத்து இடங்களிலும் மின்சாரப் பயன்பாடு 180 அலகுகளைத் தாண்டும் எனவும், அத்தகைய சூழ்நிலையில் பாரிய மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதனால், இத்தொழிற்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த விலை அதிகரிப்பு தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஹர்ஷண ருக்ஷான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version