25,000 மெட்ரிக் தொன் உர கப்பல் இன்று நாட்டிற்கு

கப்பலொன்று 25 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத் தொகையுடன் இன்று (04.04) நாட்டிற்கு வரவுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

உரப் பிரச்சினையை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சிறுபோகம் ஆரம்பமாகும் தருணத்தில் தேவையான உரம் கையிருப்பிலுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெற்செய்கைக்குரிய உரம் போதுமானளவு உள்ளதாகவும் ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு மேலதிக உரம் தேவைப்படுவதால் அதனை பூர்த்தி செய்யும் வகையில் இன்று குறித்த உரத் தொகை கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version