சம்பள உயர்வு கிடைக்காததால் நிறுவனத்தை தீ வைத்து எரித்த ஊழியர் ; அமெரிக்காவில் சம்பவம்

சம்பள உயர்வு கிடைக்காததால், தான் பணிபுரியும் நிறுவனத்தின் கிடங்குக்கு ஊழியர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

உலக புகழ்பெற்ற, சானிடரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.

இங்கு பணிபுரிந்து வந்த  29 வயது இளைஞர் சம்பள உயர்வு கிடைக்காதது, மோசமான பணிச்சூழல் காரணமாக சேமிப்பு கிடங்குக்கு தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மளமளவென பற்றிய தீ சேமிப்பு கிடங்கு முழுதும் பரவியது. 140க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 தீ விபத்திற்குள்ளான பகுதியில் பணியில் இருந்த பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கு காரணமான சமெல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version