ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விடயங்களைச் சமர்ப்பித்தனர்.

பாதிக்கப்பட்ட இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, பமுணுகம பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 55 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 3.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இவ்வாறான போலி இணையதளம் மூலம் திருடப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான், இந்தத் திட்டமிட்ட குற்றச்செயல் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலாக தகவல்களை உடனுக்குடன் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

Exit mobile version