ஆட்பதிவுத் திணைக்களம் இன்று முதல் செயல்பாட்டில்


தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவைகள் உட்பட பொதுமக்களுக்கான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன.

ஆட்பதிவுத் பதிவுத் திணைக்களத்தின் கணினித் தொகுதியில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த 17ஆம் திகதி முதல் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது கணினித் தொகுதி சீர்செய்யப்பட்டு, மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று முதல் பொதுமக்களுக்கான சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version