உயிர்த்த ஞாயிறு தற்காலைத் தாக்குதல் சம்பவங்களுக்கு சஹ்ரான் ஹாசீம் தரப்பு மட்டும் பொறுப்பு கிடையாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களை கடும்போக்குவாத இயக்கமொன்று மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி உண்மையை மூடிமறைக்க சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களை மேற்கொள்வதற்கு சூழ்ச்சித் திட்டம் தீட்டிய தரப்பினர் சஹ்ரான் ஹாசீம் தலமையிலான குழுவிற்கும் மேல் மட்டத்திலிருந்து செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த தாக்குதல்களுடன் இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு தொடர்பு இருப்பது தெளிவாக வெளிப்படுபதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்காக தெளிவான சாட்சியங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு அறிக்கைகள் மற்றும் நூல்களை வெளியிடுவதன் மூலம் இந்த பாரிய குற்றச் செயலின் பிரதான சூத்திரதாரிகள் குறித்து குறிப்பிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், உண்மையான குற்றவாளிகள் வெளிப்படும் வரையில் இந்த வெளிப்படுத்தல்களை ஏற்றுக்காள்ள முடியாது என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
