சர்வதேச சந்தையில் எகிறிய தங்க விலை

சர்வதேச பொருளாதார மாற்றங்களும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலும் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (26) உயர்வை பதிவு செய்துள்ளன.

இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,708.69 அமெரிக்க டொலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.69 டொலராகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைதலும், உலகளாவிய அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்க விலையில் ஏற்ற இறக்கமான போக்கு காணப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு இலங்கையின் உள்ளூர் சந்தையிலும் தங்க விலையை மேலும் உயர்த்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதனால், நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை நெருக்கமாக கவனித்து வருகின்றனர். அதே நேரத்தில், நுகர்வோருக்கு தங்கம் கொள்வனவு செய்யும் போது விலை மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version