அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், டெஹ்ரான் நகரின் பல்வேறு பகுதிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து வர்த்தக ரீதியான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, டெஹ்ரானிலிருந்து இஸ்தான்புல், மஸ்கட் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுள்ளதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஈரானின் வான்வெளி பகுதியளவில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
