உலக மக்களுக்கு ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பாகிஸ்தானின் வேண்டுகோள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல்களை நகர்த்தும் Project Freedom நடவடிக்கையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் மீதான போரில் அமெரிக்கா அடைந்துள்ள மகத்தான வெற்றிகள் மற்றும் ஈரானியப் பிரதிநிதிகளுடன் இறுதி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதில் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்படுகிறதா என்பதைக் கண்டறியவே இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் எனவும், அதேவேளையில் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்து முழு வீச்சில் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Exit mobile version