பிரதமர் ஹரிணி இங்கிலாந்துக்கு விஜயம்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். 

பிரதமருடன் மேலும் இருவர் சென்றுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார். 

அவர்கள் இன்று பிற்பகல் 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்.- 403 (UL- 403) என்ற விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

அவர்கள் தமது பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்பவுள்ளனர்.

Exit mobile version