முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி குறைக்கப்பட்ட போது, அரசாங்கத்திற்கு ஏற்பட்ட 1,590 கோடி ரூபாய் நஷ்டத்தை வசூலிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஜூன் மாதம் 27ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (18) ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதியரசர்கள் ஆயம், இந்த மனுவை பரிசீலனைக்காக ஜூன் மாதம் 27ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.
