கடத்தல் சந்தேக நபரைக் கைது செய்ய வேடமிட்டு சென்ற பொலிஸார்

  தாய்லாந்தின் லோப்புரி மாகாணத்தில் நடைபெற்ற வீதி நடனத் திருவிழா ஒன்றின் போது, ‘மேகா பா-வாப்-வாப்’ என்ற போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டனர்.

இதற்காக ஐந்து ஆண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அதிகாரி என மொத்தம் ஆறு பேர், பளபளப்பான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து சென்றனர்.

அதிகாரிகள் அந்த சந்தேக நபரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 53 மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் மாத்திரைகள், போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்தப்படும் 200 பிளாஸ்டிக் பைகள் மற்றும் சட்டவிரோத சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version