ரஷ்ய ஜனாதிபதியை நேரில் அழைத்த ஷெலென்ஸ்கி

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு புதிய முயற்சியாக, தனக்கும் விளாடிமிர் புடினுக்கும் இடையே ஒரு நேருக்கு நேர் சந்திப்பு நடத்தப்பட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். 

உக்ரைனிய ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில், ஐரோப்பாவில் நடக்கும் போரின் கவனம் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பும் வரை காத்திருப்பது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி ஈடுபாட்டின் மூலம் மட்டுமே அமைதியை திரும்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலம் வரை முழுமையான போர்நிறுத்தத்திற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

எவ்வாறாயினும், இதனை விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளார். 

இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று தாம் நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். 

தங்களுக்கு அந்தக் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள கிரெம்ளின் (Kremlin), இது குறித்து புடினுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Exit mobile version