திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகள் புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் வத்திக்கான் நகரில் உலகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியுள்ளனர்.
ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்கா அல்லது சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் அவரது திருவுடல் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 க்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கியும் இன்று காலை ரோமை வந்தடைந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்கிறார். அவர் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.