கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொடை பகுதியில் வாகன நெரிசல்

கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொடை வெளியேறும் வாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், போக்குவரத்துச் நெரிசலை விரைவாக வழமைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக இன்று (22) காலையில் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக ‘அத தெரண’ செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version