ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம்!

ஈரானின் பாந்தர் அப்பாஸ் நகரிலுள்ள மிகப்பெரிய துறைமுகமான ஷாஹித் ராஜீயில் சனிக்கிழமை இரசாயனப் பொருட்களினால் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் கொள்கலன்களில் இரசாயனங்கள் முறையாக சேமிக்கப்படாததே வெடிப்பு சம்பவத்துக்கு காரணம் என ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் பணிப்பாளர் இதற்கு முன்னர் துறைமுகத்திற்கு வருகை தந்தபோது இந்த துறைமுகத்திற்கு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார், மேலும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பாரிய வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை 27ஆம் திகதி பார்வையிட்ட அதேவேளை விசாரணைகளை நடத்தவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version