எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு

எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள எல் நினோ (El Niño) காலநிலை நிலைமையினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்து, தேசிய மட்டத்திலான விசேட செயல்முறைத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேற்கொண்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக, அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்த விசேட குழுவிற்காக பின்வரும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

மேலும், இந்த அமைச்சரவை உபகுழுவிற்குத் தேவையான ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version