சட்டத்தரணியின் வகிபாகம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

தமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், உரிய சட்ட நடவடிக்கைகளை அவதானிப்பதும் அது குறித்த மேலதிக நடவடிக்கைகளைச் சங்கத்திற்கு அறிக்கைப்படுத்துவதுமே சங்கத்தின் வகிபாகமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், இந்தச் சட்ட நடவடிக்கைகளின் போது சங்கத்தின் சார்பில் கருத்துகளை முன்வைப்பதற்கு அதன் நிறைவேற்றுக் குழு எந்தவொரு சட்டத்தரணிக்கும் அதிகாரமளிக்கவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது. 

குறித்த சட்டத்தரணிக்காக எந்தவொரு முன்னிலையையும் செய்வதற்கு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரின் வழக்கு விசாரணை நேற்று (25) மாலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. 

இதன்போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜரானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version