உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு

  உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக மீண்டும் வழமை போல எண்ணெய் ஏற்றுமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளமையே, உலகளாவிய விநியோகம் அதிகரித்தமைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இதன்படி, ஒரு பீப்பாய் ‘பிரெண்ட்’ (Brent) கச்சா எண்ணெயின் விலை 71.78 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு பீப்பாய் அமெரிக்க ‘டபிள்யூ.டி.ஐ’ (WTI) கச்சா எண்ணெயின் விலை 68.48 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

Exit mobile version