டொராண்டோவில் இடம்பெற்ற பஸ் விபத்து!

டொராண்டோவின் ஸ்காப்ரோ பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை டிடிசி பேருந்துடன் மோதிய விபத்தில் ஒரு ஆண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெடோவ்வேல் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவன்யூ கிழக்கு சந்திப்பில் சுமார் மாலை ஆறு மணியளவில் லொறி ஒன்றும் பஸ் ஒன்றும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து ஏற்பட்ட இடத்தில் லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்தவர் 30-வயது மதிக்கத்தக்க ஆண் என்றும், இந்த விபத்தில் வேறு எவரும் காயமடையவில்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Exit mobile version