பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது!

Man on the chair in Handcuffs. Rear view and Closeup ,Men criminal in handcuffs arrested for crimes. With hands in back,boy prison shackle in the jail violence concept.

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை, இலத்திரனியல் தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேகநபர் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது. 

அதிகாரிகள் நர்த்தனகலவிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவரைத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version