நீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தும் குளோரின் வாயு சிலிண்டர் ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக பசறை மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பசறை மருத்துவமனையின் அருகே அமைந்துள்ள பசறை பிரதேச சபையின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த குளோரின் வாயு சிலிண்டர் ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருத்துவமனையின் பணியாளர் விடுதியில் தங்கியிருந்த மூதாட்டியொருவர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பதுளை மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு யுவதி, ஒரு வாலிபர் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் பசறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
எனினும் குளோரின் வாயு சிலிண்டர் கசிவு பாரதூரமான அளவில் காணப்பட்ட நிலையில் பசறை மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அங்கிருந்த சகல நோயாளிகளும் ஹொப்டன் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.