விமானத்தில் திடீரென உயிரிழந்த பயணி!

எயார் பிரான்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் திஹித்தி தீவின் Faa’a விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு AF 029 விமானம் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும், அதை அடுத்து விமானம் Faa’a விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அங்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version