கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள டிம்மின்ஸ் நகரில், சுமார் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இரு சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்றும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல்களே காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 31-ஆம் திகதி அதிகாலை 1:00 மணியளவில், ‘பால்சம் வீதி வடக்கு’ பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
