நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதை எதிர்த்து ஜனாதிபதிக்கு கடிதம்

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது எனக்கூறி மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

​இது தொடர்பில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தமக்குத் தெரிவித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். 

​இன்று (03) மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்த பின்னர், அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

Exit mobile version