ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் வேண்டுகோள் ஏதும் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் ஓமன் கடற்பகுதியில் வந்த வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதால், அந்த ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார்.
