கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகிப்பவர், பீற் ஹோக்ஸ்ட்ரா ( Pete Hoekstra).
இந்நிலையில், பீற் ஹோக்ஸ்ட்ராவை விரும்பத்தகாத நபராக அறிவிக்கவேண்டும் (Persona non grata declaration) என்றும், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் கோரும் புகார் மனு ஒன்று கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ளது
