இஸ்ரேலில் ஆபத்தாக மாறும் காட்டுத் தீ காரணமாக அங்கு தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 ஆண்டுகளின் பின் இஸ்ரேலில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தீயணைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது